தந்தை கண்டித்ததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பம்மல் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஸ்வேதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஸ்வேதா சரியாக படிக்காமலும், வீட்டு வேலை செய்யாமலும் இருந்ததால் அவரது தந்தை ஏழுமலை சிறுமியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்வேதா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்வேதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.