Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பூங்காவில் பராமரிக்கப்படும் மான்… புதிதாக பிறந்த குட்டிகள்… தீவிர கண்காணிப்பு பணி …!!

உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் சதுப்பு நில மான் 2 குட்டிகளை ஈன்றுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் இரண்டு சிங்கங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விட்டது. இந்நிலையில் இந்த உயிரியல் பூங்காவில் பாராசிங்கா என்ற சதுப்பு நில மான் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சதுப்பு நில மான் 2 குட்டிகளை ஈன்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து அந்த பூங்காவில் பராமரிக்கப்படும் சருகுமானும் குட்டியை ஈன்றுள்ளது. மேலும் இந்த பூங்காவில் பராமரிக்கப்படும் சிங்கவால் குரங்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு குட்டியை ஈன்றுள்ளது. இதனையடுத்து விலங்கு காப்பாளர்கள் மற்றும் வனவிலங்கு டாக்டர்கள் புதிதாக பிறந்த அனைத்து குட்டிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Categories

Tech |