Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் ஷாருக்கானா?… செம மாஸ் தகவல்…!!!

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமர் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது .

SRK, Thalapathy Vijay in Kollywood director Atlee's next?

விரைவில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது . இந்நிலையில் பீஸ்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவல் உறுதியானால் விஜய், ஷாருக்கான் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |