Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! மீண்டும் புதிய கட்டுப்பாடுகளா…? வேகமாக பரவும் டெல்டா வகை கொரோனா….!!

இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போர்ச்சுக்கல் அரசாங்கம் இங்கிலாந்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதுவித அறிவிப்பை விடுத்துள்ளது. அதாவது 12 வயதிற்கு மேலான இங்கிலாந்து பொதுமக்கள் தங்கள் நாட்டிற்கு வரும்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்றுள்ளது.

அதோடு மட்டுமின்றி அவ்வாறு சான்றிதழை கொண்டுவராத இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் என்று கூறியுள்ளது. அதேபோல் மால்டா மற்றும் ஸ்பெயினும், போர்ச்சுக்கல் நாடு அறிவித்தது போலவே தங்கள் நாட்டிற்குள் வரும் போது 12 வயதிற்கு மேலான இங்கிலாந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் அல்லது 12 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |