பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் வேன் டிரைவர் காய்கறி வியாபாரியின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருவதால் வேன் டிரைவரான முருகன் என்பவரின் வாகனத்தில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம். இதனை அடுத்து முருகனுக்கும், கவிதாவிற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பண விவகாரம் குறித்து பேசுவதற்காக இரவு நேரத்தில் முருகன் கவிதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கோபமடைந்த முருகன் கவிதாவின் வீட்டிற்கு தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து அக்கம்பக்கத்தினரும், கவிதாவும் இணைந்து வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். அதன்பின் கவிதா இதுகுறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.