ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணத்தோட்டம் பகுதியில் ஆட்டோ டிரைவரான சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மதுமிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சத்யராஜ் தினமும் குடித்து விட்டு தனது மனைவி மற்றும் பெற்றோருடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து அனைவரும் தூங்க சென்ற பிறகு சத்யராஜ் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.