Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்கு சென்றவருக்கு… காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

கல்குவாரி உரிமையாளரின் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள்  பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடமலை பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் திருவேங்கட பகுதியில் கல்குவாரி ஒன்றை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனுக்கு உடல்நிலை சரி இல்லாததால் தனது குடும்பத்துடன் சிகிச்சைக்காக திருமங்கலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பி சென்ற போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு பீரோவில் இருந்த 1 லட்சத்து 75,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆகியோர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 1 லட்சத்து 75,000 பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |