கொரோனாவின் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸுக்கு எதிராக ஸ்புட்னிக்-V தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் காரணமாக , தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் தற்போது டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிலுள்ள மாஸ்கோவின் கேமலேயா ஆராய்ச்சி கழகம் இது குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் உருமாற்றம் அடைந்த டெல்டாவை வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசி 90% செயல்திறன் கொண்டிருப்பதாக ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸிலிருந்து காப்பாற்றிக்கொள்ள மக்கள் அனைவரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது.