Categories
தேனி மாவட்ட செய்திகள்

மொத்தம் 40 இடங்கள்… கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்… 2வது நாளாக ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

தேனி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக மாவட்டம் முழுவதிலும் 40 இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் உயர்ந்துவரும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும், கொரோனா தடுப்பு மருந்துகள் கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும், செங்கல்பட்டில் தொடங்கப்பட்ட தடுப்பூசி உற்பத்தி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதிலும் 3 நாட்கள் நடத்த வேண்டும் என கட்சியின் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேனியில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். மேலும் பெட்ரோல் விலையை கண்டித்து இருசக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுத்து நூதன முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |