பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி கடந்த 26-ஆம் தேதி திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் சூர்யா என்ற மாணவர் இந்த சிறுமியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கடத்தி சென்றது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த மாணவருக்கு உடந்தையாக ஜெகநாதன் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மாயமான சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர். அதன்பின் ஜெகநாதன் மற்றும் சூர்யா ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.