Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முதியவர் செய்யுற வேலையா இது…? அலறி சத்தம் போட்ட சிறுமி… அடித்து உதைத்த பொதுமக்கள்…!!

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 60 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபள்ளி பகுதியில் கிருஷ்ணப்பா என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணப்பா அப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் விரைந்து சென்று கிருஷ்ணப்பாவை சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர்.

அதன்பின் அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்து தாக்கிய பிறகு சூளகிரி காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரை கைது செய்துள்ளனர். அதன் பின் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Categories

Tech |