Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னை விட்டு எங்க போன… கணவன் எடுத்த விபரீத முடிவு… தனியாக தவிக்கும் குழந்தைகள்…!!

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் ராஜரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகாயம் என்ற மகன் உள்ளார். மேலும் சகாயத்திற்கு திருமணமாகி கற்பகம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் சகாயத்தின் மனைவியான கற்பகம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அதனால் சகாயம் பதற்றமடைந்து இதுகுறித்து ராஜபாளையம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த சகாயம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகாயத்தின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |