சீனாவில் பிற நாட்டைச் சேர்ந்த 18 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. அதன்பின்பு சீனா, கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் அங்கு கொரோனா தொற்று பரவ தொடங்கியிருப்பதாக தகவல் வெளியானது. நேற்று ஒரே நாளில் நாட்டில் 18 நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
எனினும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் பிற நாட்டை சேர்ந்தவர்கள் என்று சீன அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் சீனாவில் மேலும் 30 நபர்களுக்கு அறிகுறியின்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.