Categories
செங்கல்பட்டு

அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு…. சிறுவனின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மோட்டூர் கிராமத்தில் தேவராஜ்- சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் இருவரும் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் அவரது மகன் தனுஷ் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் தாய்- தந்தை இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதனால் தனுஷ் தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனுஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின்படி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Categories

Tech |