கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளன.
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் அத்தப்பூ கோலமிட்டும், நடனமாடியும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். திருவோண ஊஞ்சல் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஓணம் விழாவில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து கொண்டாடினர்.
இதில் மாணவர்கள் வேஷ்டி சட்டையுடன் மாணவிகள் கேரளா சேலையும் அணிந்து வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கேரளா மக்களால் பத்து நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் விழா, பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமை நிறைந்து காணப்படும் வாரத்தில் இயற்க்கை மக்கள் போற்றி வழிபடுகின்றனர். இதனால் கேரளா மற்றும் மலையாளம் பேசும் மக்கள் வாழிடத்தில் மற்றும் ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கூட ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.