நடிகர் மொட்டை ராஜேந்திரன் பப்ஜி காஸ்டியூமில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகில் ஸ்டண்ட் நடிகராக அறிமுகமாகிய மொட்டை ராஜேந்திரன் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் . இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார் . தற்போது நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் கையில் துப்பாக்கியுடன் பப்ஜி காஸ்ட்யூமில் மொட்டை ராஜேந்திரன் போஸ் கொடுத்துள்ளார் . ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.