தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகின்றது. தேர்வு முடிவுகளை பொறுத்தே மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர்வதற்கு தயாராவார்கள்.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டத்தின் படிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை படிப்புகளில் சேர சான்றிதழ்களுடன் சென்னை பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.