Categories
தேசிய செய்திகள்

இந்திய பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்…. பிரதமர் மோடி டுவீட்…!!!

நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஜிஎஸ்டி இந்திய பொருளாதார அமைப்பில் ஒரு மைல்கல் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்துடன் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி நாளையுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஜி.எஸ்.டி. ஒரே வரி விதிப்பு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. இது இந்திய வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக இது அமைந்தது. இது தொடர்பான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.\

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நள்ளிரவில் கூட்டம் நடத்தப்பட்டு, மறுநாள் ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது: இந்திய பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல். ஜிஎஸ்டி வெளிப்படைத் தன்மையை கணிசமாக அதிகரிக்கும். அதே வேளையில் சாதாரண மனிதர்கள் மீதான வரி சுமையை குறைக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |