Categories
தேசிய செய்திகள்

டெல்லி லட்சுமி நகர் சந்தையை… ஜூலை 5 வரை மூட டெல்லி மாநகராட்சி உத்தரவு…!!!

டெல்லியில் லட்சுமி நகர் சந்தையில் தடுப்பு விதிகளை மீறிய காரணத்தினால் ஜூலை 5 வரை சந்தையை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பரவி வந்த இரண்டாம் அலை தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் கொரோனா உச்சம் அடைந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டு வருவதால் அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி விடுதல் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவித்து இருந்தது.

மேலும் மார்க்கெட் பகுதிகளிலும், கடை வீதிகளிலும் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என எச்சரித்திருந்தது. ஆனால் அவை எதையும் கடைபிடிக்காமல் டெல்லி லட்சுமி நகர் பல்பொருள் சந்தையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சென்றனர். இதையடுத்து லட்சுமி நகர் சந்தையை ஜூலை 5ஆம் தேதி வரை மூடுவதற்கு டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |