Categories
உலக செய்திகள்

வருங்காலத்தை சரியாக கணித்துக்கூறிய பெண்.. இளவரசர் ஹாரி குறித்து கூறிய தகவல்..!!

பிரிட்டனில் ஒரு பெண் கொரோனா மற்றும் இளவரசர் பிலிப் மரணத்தை முன்பே கணித்து கூறிய நிலையில் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இணைவார்களா என்று கணித்திருக்கிறார்.

பிரிட்டனில் வசிக்கும் 54 வயதுடைய Deborah Davies என்ற பெண் வருங்காலத்தில் நடக்கப் போவதை முன்பே கணித்து கூறுவாராம். இவர் 2021 ஆம் வருடத்தில் அரச குடும்பத்தில் ஒரு மரணம் ஏற்படும் என்று கூறியிருக்கிறார். அதன்படி இளவரசர் பிலிப் காலமானார். மேலும் 2020 ஆம் வருடத்தில் புதிதாக ஒரு நோய் பரவ தொடங்கும் என்று கூறியிருக்கிறார்.

அதே போன்று கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் பல தகவல்களை கூறியிருக்கிறார். அதாவது இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஒன்றிணைவார்கள். ஹாரி மீண்டும் பிரிட்டனுக்கு வந்து விடுவார். எனினும் மேகன், அரச குடும்பத்திலிருந்து விலகி தான் இருப்பார் என்று கூறியிருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் வில்லியம் மற்றும் கேட் இருவரிடமும் ஹாரிக்கு ஏற்பட்ட பிரச்சனை சரியாகிவிடும். ஆனால் அவரின் தந்தையான இளவரசர் சார்லசுடனான பிரச்சனை தீர்வுக்கு வராது என்று தனக்கு தோன்றுவதாக கூறியுள்ளார். எனினும் மேகனுக்கு அரச குடும்பத்தினருடன்  இணைவது உற்சாகத்தை ஏற்படுத்தாது என்று ஹாரிக்கு சில காலத்திற்கு பின்பு தான் புரியும். அதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |