Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு- ஹன்சிகாவின் ‘மஹா’… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவும் பிரபல நடிகர் சிம்புவும் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இவர்கள் ‘மஹா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், மகத், சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

https://twitter.com/ihansika/status/1410205688572235779

இந்த படத்தின் டீசர் வருகிற ஜூலை 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் மஹா படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மஹா படத்தின் பாடல் உரிமையை ஸ்டார் மியூசிக் இந்திய நிறுவனம் பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |