Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்போதான் கொஞ்சம் குணமாகுது… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை… வனத்துறையினரின் தகவல்…!!

உடல் நலம் பாதிக்கப்பட்டு மரக் கூண்டில் அடைக்கப்பட்ட யானையின் காயம் குணமடைந்து வருகிறது.

நிலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு காட்டு யானை காயத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றி வந்துள்ளது. இந்நிலையில் கூடலூர் மார்தோமா நகர் காட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட இந்த காட்டு யானையை கும்கி யானைகளின் உதவியோடு கடந்த 17-ஆம் தேதி வனத்துறையினர் பிடித்து விட்டனர்.

அதன்பின் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானையை வனத்துறையினர் முதுமலைக்கு கொண்டு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள மரக்கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இந்த யானைக்கு பசுந்தீவனங்கள், கொள்ளு, அரிசி, தேங்காய் போன்ற ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதால் யானையின் காயம் குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |