Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தொடங்கும் ‘சூர்யா 40’ படப்பிடிப்பு… வெளியான செம மாஸ் தகவல்…!!!

சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 12-ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட உள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் .

surya40_shooting

கடந்த மார்ச் மாதம் ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற ஜூலை 12-ம் தேதி ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |