சட்ட விரோதமாக சாராய விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுப்பாலப்பட்டு ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அங்கே விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பூபதி ஆகியோர் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்ததால் அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர்.
அதன்பின் அவர்களிடமிருந்த 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தியாகராஜபுரம் ஏரிக்கரையில் சாராயம் விற்ற அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 40 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.