கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள குப்பநத்தம் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் இறந்த துக்கத்தை தாங்க முடியாத ராஜம்மாள் வீட்டில் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்துள்ளார்.
அதன்பின் ராஜம்மாள் மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.