Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! துணிச்சல் வேண்டும்..! அனுகூலம் ஏற்படும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று தனவரவு கூடி மனமகிழ்ச்சி அடையும்.

மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமை படக்கூடும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பெயரும் புகழும் ஓங்கி இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். காரியத்தில் அனுகூலமும் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவிகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை கூடி மனதில் தைரியம் பிறக்கும்.

எடுத்த காரியத்தை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களின் கல்விக்காக வேண்டியதை வாங்கி கொடுப்பீர்கள். குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள, இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.

Categories

Tech |