Categories
அரசியல் தேசிய செய்திகள்

1 ஆண்டாக கல்லூரிக்குள் வைத்து பலாத்காரம்…. சிக்கிய பாஜக பிரபலம்…. ஆதாரங்களை வெளியிட தயார்… மாணவி பகிர் பேட்டி…!!

உத்திரப்பிரதேசத்தில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறியுள்ள சட்டக்கல்லூரி மாணவி அதற்கான ஆதாரத்தை ஒப்படைக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் சட்ட கல்லூரி  மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக நேற்று டெல்லியில் பாதிக்கப்பட்ட மாணவி பத்திரிகையாளர்களை சந்தித்து உள்ளார். ஓராண்டாக சுவாமி சின்மயானந்தா கல்லூரிக்குள் வைத்து மாணவியை பலாத்காரம் செய்து வந்தார் என்று கூறிய மாணவி,

அவர் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்றும் அதனை விரைவில் காவல்துறை உயர் அதிகாரிகளிடம்  அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் சுவாமி சின்மயானந்தா மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. உத்திர பிரதேச மாநிலத்தில் சுவாமி சின்மயானந்தாவிற்கு சொந்தமான சட்டக்கல்லூரியில் இந்த மாணவி படித்துவந்தார்.

Image result for பாஜக சுவாமி சின்மயானந்தா

இந்நிலையில் சுவாமி சின்மயானந்தா மீது மறைமுகமாக பாலியல் குற்றம் சாட்டி மாணவி  நீதி தேடி வந்த நிலையில், திடீரென சுவாமி சின்மயானந்தா தலைமறைவானார். பின் ராஜஸ்தானில் மீட்கப்பட்ட அவர் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கை தீவிரமாக கண்காணித்து வரும் உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதையடுத்து அந்த குழு விசாரணையை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |