சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 17 திருமண மண்டபங்களுக்கு 84 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று திருமண மண்டபங்கள், நிகழ்ச்சிகள் நடைபெறும் ஓட்டல்களும் தெரியப்படுத்தப்பட்டது. அதன்படி மாநகராட்சி தகவல் தெரிவிக்கப்பட்ட மண்டபங்களில் நிகழ்ச்சி நடைபெறும் பொழுது வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் மண்டலங்களாக குழுவினர் ஆய்வில் ஈடுபடுவார்கள்.
ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 17 திருமண மண்டபங்களுக்கு 84 ஆயிரம் அபராதம் வசூலிக்க பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அந்த வகையில், இதுவரை 946 இடங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா இன்று ஆய்வு மேற்கொள்ளப் பட்டதாகவும், அதில் 17 திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது ஆகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.