Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த இருசக்கர வாகனம் …. மடக்கி பிடித்த போலீசார் ….சோதனையில் சிக்கிய பொருள் …!!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட   2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் புதுப்பேட்டை சந்திப்பில் வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 வாலிபர்களை  மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபர்களிடம் 100 கிராம் கஞ்சா மற்றும் 10 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 வாலிபர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா ,சாராயம் இருசக்கர வாகனங்கம் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட  விசாரணையில் கொளத்தூர் புதிய காலனியை சேர்ந்த மணிகண்டன், மதன் என்பதும் இவர்கள் வேலூரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.

Categories

Tech |