குடிபோதையில் தகராறு செய்ததால் கணவனை மனைவி கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் காளிமுத்து என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காளிமுத்து தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து குடிபோதையில் தனது மூன்று மகள்களையும் காளிமுத்து அடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த தமிழ்ச்செல்வி தனது மகள்கள் வெளியே நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின் கோபமடைந்த தமிழ்செல்வி வீட்டில் இருந்த கல் மற்றும் கம்பால் கணவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காளிமுத்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தமிழ்ச்செல்வியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.