கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள எர்ரம்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மோட்டார் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சில மர்ம நபர்கள் இவரது கடையை உடைத்து உள்ளே இருந்த சிசிடிவி கேமரா, மடிக்கணினி மற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர்.
இதனையடுத்து மறுநாள் காலை கடைக்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.