மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள தும்பைபட்டி பகுதியில் அய்யனார் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் அய்யனார் தனது நண்பர்களான ஆனந்தன் மற்றும் வினோத்குமார் போன்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து நான்கு வழி சாலையில் இருந்து மேலூருக்கு திரும்பிய போது இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக சென்ற கார் மோதி விட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அதன்பின் அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூன்று பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.