வனத்துறையினர் நட்சத்திர ஆமையை பிடித்து உயிரியல் பூங்காவில் பத்திரமாக விட்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் பகுதியில் ஹரிராம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு முன்பாக செல்லும் சாக்கடை கால்வாயில் ஆமை ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது அது நட்சத்திர ஆமை என்பது தெரியவந்துள்ளது.
அந்த நட்சத்திர ஆமை பிடித்து குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் வனத்துறையினர் விட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, தற்போது பெய்த கனமழை காரணமாக அருகில் இருக்கும் மலை பகுதியில் இருந்து இந்த நட்சத்திர ஆமை அடித்து வரப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.