விருச்சிகம் ராசி அன்பர்களே.! வீண் அலைச்சல் உண்டாகும்.
இன்று தொழிலில் இருந்து வந்த மந்த நிலை விலகி முன்னேற்றம் ஏற்பட்டுவிடும். நண்பர்களின் உதவியும் தக்க சமயத்தில் கிடைக்கும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். மேல் இடத்தில் இருந்து கனிவான பார்வை உங்கள் மீது படும். அதனால் பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற நல்ல விஷயங்களும் நடக்கும். மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தான வரவு அதிகரித்தாலும் கையில் கிடைப்பதில் தாமதம் இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். எந்த காரியம் செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். உடல் சோர்வு இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். காதல் கைகூடி விடும். காதலில் கடினமான சூழ்நிலை இருந்தாலும் பக்குவமாக கையாண்டால் அதனை சரி செய்து கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் மதிப்பெண்களை அதிகமாகப் பெற்றுக் கொண்டு சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை