தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் கை விரல் ரேகை பதிவு நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அதனால் மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கைரேகை முறை நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி புதிய கார்டுகள் ஒப்புதல் தரும் சேவையும் இன்று முதல் மீண்டும் தொடங்குவதாக தெரிவித்துள்ளது.
Categories