தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் முழுவதிலும் உள்ள 27 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் முழுமையாக ஆம்னி பேருந்துகள் இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக மொத்தம் உள்ள 4000- க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உருவானது. இருப்பினும் ஒரு சில பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இன்று முதல் முழு வீச்சில் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.