தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒட்டுமொத்த பாதிப்பு ஒவ்வொரு நாளும் குறைந்து வந்தாலும் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து பொது போக்குவரத்து அனுமதிக்கப்படாத கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. அதனால் ஊரடங்கு கடுமைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.