Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – சசிகலா மோதல்…. வெடித்தது அடுத்த பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை.

இந்நிலையில் சசிகலா என்பவர் அம்மா வீட்டு வேலைக்காரர் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். சசிகலா யார்? அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தவர். வேலை முடிந்ததும் சென்றுவிட்டார். அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை. யார் தயவும் அதிமுகவுக்கு தேவை இல்லை என கூறியுள்ளார். ஏற்கனவே சசிகலா குறித்து இபிஎஸ் கருத்து தெரிவித்த நிலையில் இப்போது சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |