நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 9 மணிக்கு பதில் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோயில்களை மாலை 5 மணிக்கு பதில் இரவு 9 மணி வரை திறந்திருக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.