Categories
மாநில செய்திகள்

BREAKING: கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு…. அதிர்ச்சி செய்தி….!!!!

தமிழகம்  முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.825 ஆக இருந்த நிலையில் மூன்று மாதத்திற்கு பிறகு 25 ரூபாய் உயர்ந்து, ரூ.850 ஆகவும் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூ.84.50 அதிகரித்து ரூ. 1687.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |