Categories
தேசிய செய்திகள்

சுரங்ககளுக்கான ஒப்பந்தத்தில் முறைகேடு…. மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றசாட்டு..!!

இரும்புத்தாது மற்றும் பிற கனிம வளங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களுக்கான  மறு ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறுவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இரும்பு  தாது உள்ளிட்ட  கனிம வளங்களை வெட்டி  எடுக்கும் 358 சுரங்கங்கள் ஒப்பந்தங்களை 50 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து இருப்பதாக காங்கிரஸ் செய்தி  தொடர்பாளர் பவன் தெரிவித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அவசர சட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாமல்  ஏலமும் நடத்தப்படாமல் சுரங்கங்களில் குத்தகைக்கு விடப்பட்டிருப்பதை பவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Image result for கனிம சுரங்கங்கள்

சில சுரங்கங்களின் ஒப்பந்த காலம் 2030-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரிகள்  விசாரித்து அரசுக்கு ஏற்பட்டிருக்கும் உண்மையான இழப்பு எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |