தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஒரு சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை ஒப்பிடுகையில் இதுவே மிகவும் குறைவு. கொரோனா முதல் அலையில் அதிக பட்சமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20.5% ஆக இருந்தது. இரண்டாம் அலையில் மே மாதம் மத்தியில் 27.7% ஆக இருந்த தினசரி பாதிப்பு ஒரு சதவீதமாக குறைந்துள்ளது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.