Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அம்மாகிட்ட சொல்லிடுவேன்” கணவனின் கொடூர செயல்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள காவலாகுறிச்சி பகுதியில் கூலித் தொழிலாளியான மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 18 வயதுடைய ஷாலோம் ஷீபா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாலோம் ஷீபாவும் அதே பகுதியில் வசிக்கும் முத்துராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை ஷாலோம் ஷீபா தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு ஷாலோம் ஷீபாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் முத்துராஜ் மற்றும் ஷாலோம் ஷீபா ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோபமடைந்த மாரிமுத்து அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் வரக்கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் ஷாலோம் ஷீபாவின் தாயான பாக்கியலட்சுமி தனது மகளுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் ஷாலோம் ஷீபா மற்றும் முத்துராஜ் ஆகிய இருவரும் இணைந்து அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு வீட்டிற்கு   சென்றபோது திடீரென முத்துராஜ்க்கும், ஷாலோம் ஷீபாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதுபற்றி ஷாலோம் ஷீபா தனது தாயிடம் கூறுவதாக சென்று வீட்டின்  கதவை மூடிக்கொண்டார். இதனையடுத்து முத்துராஜ் கதவைத் திறந்த தனது மனைவிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபம் அடைந்த முத்துராஜ் அங்கிருந்து அரிவாளை எடுத்து தனது மனைவி என்று கூட பாராமல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷாலோம் ஷீபாவை அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு ஷாலோம் ஷீபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஷாலோம் ஷீபாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |