மெக்சிகோவில் தனிநபர் 28 கிராம் கஞ்சாவை வைத்திருப்பதும், தங்களுடைய வீட்டில் 8 கஞ்சா செடிகள் வரை வளர்ப்பதும் குற்றமல்ல என்று அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மெக்சிகோ நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரிக்கப் பட்டுள்ளது. இதனை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் ஒவ்வொரு இளைஞர்களும் தங்களுடைய போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவது குற்றமல்ல என்று தீர்ப்பை வழங்கியுள்ளது. அதோடு மட்டுமின்றி தங்களுடைய சொந்த தேவைக்காக கஞ்சாவை பயிரிடுவதும் குற்றமாக கருதப்படாது என்றும் மெக்சிகோ நாட்டின் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி மெக்சிகோவில் இனி தனிநபர் 28 கிராம் அளவிலான கஞ்சா வரையும், தங்களுடைய வீட்டில் 8 கஞ்சா செடிகள் வரையும் வளர்த்துக்கொள்ளலாம். ஆனால் இந்த கஞ்சாவை குழந்தைகள் முன்பாகவோ அல்லது பொதுவெளியிலயோ பயன்படுத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.