Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அத்தை வீட்டிற்கு சென்ற போது… ஒருவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள முத்துகிருஷ்ணபேரி பகுதியில் கடற்கரை நாடார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கும் வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் தனது அத்தையை பார்ப்பதற்காக அழகாபுரி கிராமத்திற்குச் சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு சுடலை மாடசாமி கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது அங்கிருந்து சென்று விட்டது.

இந்த விபத்தில் வேல்முருகன் தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்த  வேல்முருகனை உடனடியாக  மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு வேல்முருகனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று வேல்முருகனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |