ஒரு பெண், பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம் எனும் சட்டம் குறித்த அறிக்கையை தென்னாபிரிக்கா அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கும், ஓரின திருமணத்திற்கும் தென்அமெரிக்காவில் சட்டபூர்வ அனுமதியுள்ளது. இதனால் ஒரு பெண்ணும், பல ஆண்களை திருமணம் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்படி அனுமதி அளிக்குமாறு பாலின உரிமை ஆர்வலர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதனை பரிசீலனை செய்த அரசு இந்த சட்டம் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த சட்டத்திற்கு பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்வதற்கான சட்டம் குறித்து தென்னாப்பிரிக்க பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு கேட்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியதாவது, இந்த சட்டம் ஆப்பிரிக்க கலாச்சாரத்தை அழித்துவிடும் என்றும், இது குழந்தைகளுடைய எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.