கனடாவில் கடும் வெயில் நிலவுவதால் கடந்த நான்கு நாட்களில் 233 நபர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அங்கு ஜூனில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை கோடை காலம் நிலவுகிறது. இந்த வருடம் கோடை காலத்தில் கடும் வெயில் ஏற்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள லிட்டன் என்ற நகரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
மிகவும் அதிகமாக லைட்டான் என்ற நகரில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. எனவே வெப்பத்தை தாங்க முடியாமல், 233 நபர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே கனடா அரசு பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என்றும் குளிர்சாதன அறைகளில் இருக்குமாறும், அதிகமாக தண்ணீர் குடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.