Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தேடுவதை அறிந்த மர்ம ஆசாமிகள்…. இரவில் நடந்த சம்பவம்…. பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!

காவல்துறையினர் தேடுவதால் திருடிச் சென்ற அம்மன் சிரசை மர்ம ஆசாமிகள் கோவிலில் வைத்து சென்றுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள எம்.பி குப்பம் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மன் சிரசு ஊர்வலத்துடன் திருவிழா நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் கிராம மக்கள் தரப்பில் வருகின்ற 16-ஆம் தேதி திருவிழா நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மற்றொரு தரப்பினர் கோவில் தங்களுக்கு சொந்தமானது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து திருவிழா நடத்த அனுமதி வழங்க கோரி மேல்பட்டி காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தனர்.

இதனால் கிராம மக்கள் கெங்கையம்மன் கோவிலில் இருந்த அம்மன் சிரசு பாதுகாப்பாக கடந்த 27-ஆம் தேதி எடுத்துச்சென்று அருகிலுள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் வைத்திருந்தனர். அங்கு வைத்திருந்த அம்மன் சிரசு திடீரென மாயமான போனது. இதனையடுத்து கோயிலில் இருந்த சிசிடிவி கேமராவில் மர்ம ஆசாமிகள் சுவர் ஏறி குதித்து அம்மன் சிலையை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் படி சப்- இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அம்மன் சிரசை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகள் தங்களை காவல்துறையினர் தேடுவதை அறிந்து  தாங்களாகவே முன்வந்து மீண்டும் கோவிலில் அம்மன் சிரசை இரவில்  வைத்து சென்றுள்ளனர். இவ்வாறு கோவிலில் அம்மன் சிரசை வைத்து சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அம்மன் சிரசு வைக்கப்பட்டுள்ள கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Categories

Tech |