மாணவி மீது அசிட் வீசிய மாணவன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை மாணவி சுசித்ரா நடந்து வரும்போது அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன் முத்தமிழ் இளைஞன் நீண்டநாள் காதலித்ததாக கூறப்படும் நிலையில் அந்த பெண்ணின் மீது ஆசிட் வீசினார். ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த சுசித்ரா சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அண்ணாமலை நகர் போலீசார் முத்தமிழ் மீது வழக்கு பதிவு செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அதாவது 294b , 341 , 326 , 327 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்காக விரைவில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் ஒரே மருத்துவமனையில் சுசித்ரா மற்றும் முத்தமிழ் அனுமதிக்கப்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணாமலை நகர் டிஎஸ்பி நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.