இந்தியாவை சேர்ந்த தம்பதிகள் அபுதாபியில் அவர்களுடைய வீட்டியில் வளர்த்து வரும் காய்கறி தோட்டம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .
இந்தியாவை சேர்ந்த அத்வைதா சர்மா – பிராசி தம்பதியினர் துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில் பணிமாற்றம் காரணமாக துபாயில் இருந்து அபுதாபிக்கு சென்றுள்ளனர் . அவர்கள் தங்கியிருந்த வீட்டில்ஒரு தோட்டத்தை ஏற்படுத்தி காய்கறி , பழங்களை வளர்த்து வந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அத்வைதா ஷர்மா கூறுகையில், என் மனைவி பிராசி கர்ப்பமாக இருந்தபோது ரசாயனம் கலக்காத ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும் என்று நினைத்தோம். இதற்காகவே நாங்கள் தங்கியிருந்த வீட்டில் செடி,கொடிகளை வளர்க்க ஆரம்பித்தோம் .இந்தச் செடி,கொடிகளை வளர்ப்பதற்கு தேவையான உரங்களை வீட்டில் கிடைக்கும் உணவு கழிவு பொருட்களை பயன்படுத்தி செடி கொடிகளை வளர்த்து வந்தோம்.
எங்களுடைய இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்ததால் மாடி தோட்டத்தை விரிவு படுத்தினோம். நாங்கள் தற்போது வசித்து வரும் கலிப்பா நகரிலுள்ள பாலைவனம் பகுதியில் தக்காளி , உருளைக்கிழங்கு, மிளகாய், மாம்பழம் உட்பட 30 வகையான காய்கறிகள் ,பழங்களை கொண்ட சுமார் 500 செடிகளை 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வளர்த்து வருகிறோம். இந்தச் செடிகள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் இந்த செடி கொடிகளை வளர்க்க சிரமமாக இருந்தாலும் , நாளடைவில் அதை வளர்ப்பதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது .எங்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் எங்களிடம் செடி,கொடிகளை வளர்ப்பது குறித்து கேட்டறிந்து அவர்கள் வீட்டிலும் காய்கறி தோட்டத்தை ஏற்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ‘என்று கூறினார்.